| ADDED : மார் 22, 2024 04:22 AM
சிவகாசி: சிவகாசியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ரூ. 76 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள், இரு சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.சிவகாசி புதுத்தெருவை சேர்ந்தவர் வீர மணிகண்டன் 32. இவர் தனது மினிவேனில் அரசு அனுமதி இன்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ. 28 ஆயிரத்து 960 மதிப்பிலான பட்டாசுகள், மினி சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.சாட்சியாபுரத்தைச் சேர்ந்த சந்திர லீலா 48, அசோக் குமார் 40, ஆகியோர் சந்திர லீலா விற்கு சொந்தமான பட்டாசு கடையில் தடை செய்யப்பட்ட சரவெடிகளை பதுக்கி வைத்திருந்தனர். கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ. 23 ஆயிரத்து 940 மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.திருத்தங்கல் கே.கே., நகரை சேர்ந்த தியாசெல்வின் 26, தனது லோடு வேனில் அனுமதி இல்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூபாய் 25 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் லோடு வேனை பறிமுதல் செய்தனர்.---