உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குறுங்காடு வளர்ப்பு திட்டம்

குறுங்காடு வளர்ப்பு திட்டம்

திருச்சுழி : திருச்சுழி அருகே உடையனம்பட்டியில் குறுங்காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.திருச்சுழி ஒன்றியம் உடையனம்பட்டி ஊராட்சி, கிரீன் பவுண்டேஷன் சார்பாக கிராமத்தை பசுமையாக மாற்றுவதற்கு இல்லங்கள் தோறும் மரக்கன்று வழங்குதல், சாலை ஓரங்களில் மர வளர்ப்பு, ஊருணி, கண்மாய் கரைகளில் மரம் வளர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. தமிழக அரசின் பசுமை கிராமத் திட்டத்தின் படி அரசு பள்ளி வளாகத்தில் குறுங்காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 600க்கு மேற்பட்ட மரங்கள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டது. இதற்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூடுதலாக மரங்களை வளர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார். ஊராட்சி தலைவர் ஜெயமுருகன், பவுண்டேஷன் நிர்வாகி பொன்ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை