மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
19 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
19 hour(s) ago
சாத்துார் : சாத்துார் நகரில் மக்களை அச்சுறுத்தும் வகையில் உலா வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாத்துார் தென் வடல் புதுத்தெரு, முன்சீப் கோர்ட் தெரு, காட்டுப் புதுத் தெரு , கான்வென்ட் தெரு, முருகன் கோயில் தெருக்களில் கூட்டமாக உலா வரும் தெரு நாய்களால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.காலை, மாலை நேரங்களில் கூட்டமாக உலா வரும் நாய்கள் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை விரட்டுவதால் பெற்றோரும் , மாணவர்களும் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது. டூவீலர்கள் மீது நாய்கள் மோதுவதால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். சில சமயங்களில் உயிர் பலி ஏற்படுகிறது.கூட்டம் கூட்டமாக உலா வரும் தெருவில் உலா வரும் கால்நடைகளை மிரட்டுவதோடு அவற்றை கடிக்கவும் முற்படுகின்றன. இதனால் கால்நடை வளர்ப்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நகராட்சி நிர்வாகம் நாய்கள் எண்ணிக்கையை தடுக்க முன்பு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது 5 ஆண்டுகளாக கருத்தடை நடவடிக்கை இல்லாததால் நாய்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் ஊராட்சி பகுதியில் இருந்து அதிக அளவில் நாய்கள் நகருக்குள் வருகின்றன. சொறிபிடித்தும் தோல் அழுகிய நிலையிலும் உலா வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.நகராட்சி நிர்வாகம் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
19 hour(s) ago
19 hour(s) ago