உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேறும் சகதியுமாக ரோடுகள், தெருவிளக்கு இல்லை சிரமத்தில் விருதுநகர் ஆர்.எஸ்., நகர் மக்கள்

சேறும் சகதியுமாக ரோடுகள், தெருவிளக்கு இல்லை சிரமத்தில் விருதுநகர் ஆர்.எஸ்., நகர் மக்கள்

விருதுநகர்: மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே குடிநீர், மழையில் சேறும், சகதியுமான ரோடு, தெரு விளக்குகள் இல்லாத சூழல், தெருநாய்கள் தொல்லை, குடியிருப்பு பகுதிகளில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் என பல பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் விருதுநகர் ஆர்.எஸ்.,நகர் மக்கள்.விருதுநகர் கூரைக்குண்டு ஊராட்சியின் ஆர்.எஸ்., நகரில் ரோஜா, மல்லிகை, செவ்வந்தி தெருக்கள், தியான மண்டபம் அருகே 8 தெருக்கள் உள்ளது. இப்பகுதியில் பிரதான ரோட்டில் இருந்து தெருக்களுக்கு செல்லும் ரோடுகள் எதுவும் அமைக்கப்படாமல் மண், கற்கள் பரப்பிய ரோடாக உள்ளது. இவை மழைக்காலத்தில் ரோடுகள் சேறும், சகதியுமாகி நடந்து, வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது.குடிநீர் மாதத்திற்கு 2 முறை மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. தெருக்களில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு பணி முடிந்து வருபவர்கள் அச்சத்துடன் வீடுகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. தெருநாய்களின் தொல்லை அதிகரித்து நடந்து, வாகனங்களில் செல்பவர்களை துாரத்துதல், கடிக்கும் சம்பவங்கள் நடக்கிறது.இங்குள்ள குடியிருப்புகளை சுற்றி காலிமனைகள் அதிகமாக இருப்பதால் முட்புதர்கள் அடர்ந்து இருப்பதால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கழிவுநீரை வெளியேற்ற முறையான வாறுகால் இல்லததால் கழிவு நீர் ரோட்டில் செல்கிறது.தெருக்களுக்கு ரோடுகள் இல்லாததால் மழைக்காலத்தில் சேறும், சகதியுமாகி வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. வாறுகால் வசதி இல்லாததால் வீட்டின் கழிவுநீரை ரோட்டில் வெளியேற்றும் சூழல் உள்ளது.- - சுருளிராஜ், சுயதொழில்.

ரோடு, வாறுகால் அமையுங்கள்

இப்பகுதியில் தெருவிளக்குள் இல்லாததால் இரவு நேரத்தில் பணி முடிந்து வருபவர்கள் சிரமப்படுகின்றனர். தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பால் அச்சத்துடன் இரவில் செல்ல வேண்டியுள்ளது.-- சுந்தர், கல்லுாரி பணியாளர்.வீடுகளுக்கு மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் கேன், வாகனங்களில் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டியுள்ளது.- மல்லிகாதேவி, குடும்பத் தலைவி.

குடிநீரின்றி சிரமம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை