உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சதுரகிரியில் அமாவாசை வழிபாடு

சதுரகிரியில் அமாவாசை வழிபாடு

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்செய்தனர்.நேற்று காலை 6:00 மணிக்கு பக்தர்கள் வனத்துறையினரின் சோதனைக்கு பின் மலையேற அனுமதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கம் மிகவும் அதிகளவில் காணப்பட்ட நிலையில் மதியம்12:00 மணி வரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறினர்.கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அமாவாசை வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ