உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காரியாபட்டியில் சிப்காட் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரம்

காரியாபட்டியில் சிப்காட் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரம்

காரியாபட்டி: காரியாபட்டியில் அமையவிருக்கும் சிப்காட்டிற்கு இடம் தேர்வு செய்வதற்கான பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.காரியாபட்டி பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்து வருகிறது. விவசாயத்தைத் தவிர மற்ற வேலை வாய்ப்புக்கான தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் கிடையாது. விவசாய பணிக்கும் ஆட்கள் கிடைக்காததால் தொடர்ந்து செய்ய முடியாமல் பெரும்பாலான விவசாயிகள் விவசாயம் செய்வதை கைவிட்டனர். ஏராளமான விளை நிலங்கள் விலை நிலங்களாகவும், தரிசுகளாகவும் உள்ளன. இப்பகுதியில் படித்த இளைஞர்கள் பலர் வேலை தேடி சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்கின்றனர். படித்தும் பலர் வேலை இன்றி சுற்றித் திரிகின்றனர். இதனை தவிர்க்கும் பொருட்டு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க, தொழில் நிறுவனங்களை கொண்டு வர இப்பகுதியில் சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் காரியாபட்டி கே. கரிசல்குளம், வக்கணாங்குண்டு, கழுவனச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இடம் தேர்வு செய்யும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இப்பகுதியில் சிப்காட் அமையும் பட்சத்தில் தொழில் நிறுவனங்கள் அதிகரித்து, காரியாபட்டி பகுதி வளர்ச்சி அடையும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆகவே விரைந்து சிப்காட் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை