உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உரிமம் ரத்து ஆலையில் பட்டாசு தயாரிப்பு சீல் வைத்த அதிகாரிகள்

உரிமம் ரத்து ஆலையில் பட்டாசு தயாரிப்பு சீல் வைத்த அதிகாரிகள்

சிவகாசி: சிவகாசி அருகே வி.சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவருக்கு அதே பகுதியில் சண்முகப்பிரியா பட்டாசு ஆலை உள்ளது.இந்த ஆலை விதி மீறி இயங்கியதால் மார்ச் 1 ல் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டது. இங்கு அனுமதியின்றி சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பதாக தாசில்தார் வடிவேலுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வில் பட்டாசு ஆலையில் 25 தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் ஆய்வக அறை, பொது அறையில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்டாசுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் பட்டாசு ஆலைக்கு சீல் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை