| ADDED : ஆக 18, 2024 03:58 AM
சிவகாசி சிவகாசி அருகே குமிழங்குளத்தைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் 84. இவரது மருமகனுக்கு எரிச்சநத்தத்திலிருந்து அழகாபுரி செல்லும் ரோட்டில் தோட்டத்துடன் கூடிய மினரல் வாட்டர் நிறுவனம் உள்ளது. இவர் மினரல் வாட்டர் பிளாண்டை அங்கேயே தங்கி தனது பொறுப்பில் பார்த்துக் கொண்டு வந்தார்.நேற்று அதிகாலை 5:45 மணி அளவில் தோட்டத்தில் ஆயுதங்களால் தாக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சம்பவ இடத்தை எஸ்.பி., கண்ணன், சிவகாசி டி.எஸ்.பி., சுப்பையா நேரில் பார்வையிட்டனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டிருந்தது. கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சவுந்தர்ராஜன் கழுத்தில் மூன்றரை பவுன் தங்க செயினும், விரலில் ஒரு பவுன் தங்க மோதிரமும் போட்டிருந்தார். இவை இரண்டுமே திருடப்பட்டுள்ளது. எனவே தனியாக இருந்த சவுந்தர்ராஜன் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். எம். புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.