| ADDED : ஆக 16, 2024 03:42 AM
பெண்ணுக்கு அடி
சிவகாசி பெரிய பொட்டல்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் தேவி செல்வி 34. இவர் வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் 35, வீட்டிற்குள் நுழைந்து தவறாக நடக்க முயன்றார். எதிர்ப்பு தெரிவித்த தேவி செல்வியை அடித்தார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர். தம்பதி காயம்
சிவகாசி நாரணாபுரம் ரோடு போஸ் காலனியை சேர்ந்தவர் நல்ல சேவுகன் 40. இவர் தனது மனைவி சுடலை வடிவுடன் டூவீலரில் போஸ் காலனி பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது மயிலாடும்துறை பத்திரகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த குமார் 24, ஓட்டி வந்த லோடுவேன் மோதியதில் இருவரும் காயம் அடைந்தனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர். மோட்டார் திருட்டு
சிவகாசி செவலுார் மேல தெருவை சேர்ந்தவர்சோலைமலை 77. அதே பகுதியில் இவருக்கு சொந்தமான தோட்டத்திலிருந்த மோட்டாரை மர்ம நபர்கள் திருடி சென்றனர். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். முதியவர் பலி
சிவகாசி திருத்தங்கல் முனியசாமி நகையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் 52. மது அருந்தும் பழக்கம் உள்ள இவர் திருத்தங்கல் காமராஜர் சிலை அருகே இறந்து கிடந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.