உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு விபத்து நிவாரணம் வழங்கல்

பட்டாசு விபத்து நிவாரணம் வழங்கல்

விருதுநகர், : சிவகாசி செங்கமலபட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் நிவாரணம் வழங்கப்பட்டது.சிவகாசி செங்மலப்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் மே 9ல் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குதலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த காரணத்தால், வழங்கப்படாமல் இருந்த நிவாரணத் தொகைகள் நேற்று வழங்கப்பட்டன. உயிரிழந்த 10 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.30 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை