| ADDED : ஆக 03, 2024 04:27 AM
சிவகாசி: சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் பணிகள் துவங்க உள்ளதால் ஆக. 8 முதல் ரயில்வே கேட் மூடப்படும். மற்றுப்பாதையில் வாகனங்கள் இயங்க அறிவிக்கப்பட்டுள்ளது.சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க ஆக. 8 முதல் ரயில்வே கேட் மூடப்பட்டு வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்லுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்துார் - சிவகாசி ரோட்டில் வரும் கனரக வாகனங்கள் திருத்தங்கல் செங்கமலநாச்சியார்புரம் ரோடு வழியாகச் சென்று பின் சுக்கிரவார்பட்டி, வடமலாபுரம் சோதனை சாவடி வழியாக விருதுநகர் ரோடு செல்ல வேண்டும்.ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து சிவகாசி வரும் பஸ்கள், வாகனங்கள் செங்கமலநாச்சியார்புரம் ரோடு வழியாகவும் , சிவகாசி எரிச்சநத்தம் ரோடு ஒய்.ஆர்.டி.வி., பள்ளி வழியாக சிவகாசி நகருக்குள் செல்ல வேண்டும். சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் செல்லும் பஸ்கள், கனரக வாகனங்கள் சிவகாசி ஆலங்குளம் ரோடு வழியாக ஆனையூர் ரோட்டில் இணைந்து ரிசர்வ் லைன் வழியாக ஸ்ரீவில்லிபுத்துார் செல்ல வேண்டும் என நெடுஞ்சாலை திட்ட கோட்ட பொறியாளர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.