உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளிக்குள் சாக்கடை கழிவுநீர்

பள்ளிக்குள் சாக்கடை கழிவுநீர்

விருதுநகர் : விருதுநகரில் வாடியான் தெருவில் ஏ.பி.சங்கரலிங்கநாடார் பெண்கள் துவக்கப்பள்ளிக்குள் வாறுகால் சாக்கடை கழிவுநீர் புகுந்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகரில் வாடியான் தெருவில் ஏ.பி.சங்கரலிங்கநாடார் பெண்கள் துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு மாணவிகள் படித்து வரும் நிலையில் இதன் வெளிப்புறத்தில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய நகராட்சியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தொற்று அபாயம் ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் கழிவுநீர் பள்ளிக்குள் புகுந்து விட்டது. இதனால் துர்நாற்றத்தால் மாணவிகள் திணறினர். தேங்கி நிற்கும் கழிவுநீரால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை