| ADDED : ஜூன் 05, 2024 12:14 AM
விருதுநகர் : மாநில அளவிலான குத்துச்சண்டை கழக அணிக்கான வீரர்கள் தேர்வு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ( நாளை) ஜூன் 6 ல் நடக்கிறது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் ஜூன் 10, 11 தேதியில் நடக்கவுள்ள மாநில போட்டியில் பங்கேற்பார்கள் என மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு: தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் இடையே மிகமூத்தோருக்கான குத்துச்சண்டை போட்டி ஜூன் இறுதியில் பெங்களூரில் நடக்கவுள்ளது.இதில் பங்கேற்கும் மாநில அளவிலான வீரர்கள் தேர்வு ஜூன் 10, 11 தேதிகளில் சென்னை புதுகல்லுாரியில் நடக்கிறது. இதில் விருதுநகர் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்கும் குத்துச்சண்டை வீரர்களுக்கான தேர்வு ஜூன் 6 மாலை 4:00 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.இந்த போட்டியில் 51 (கிலோ), 57, 63.5, 71, 80, 92, 92 கி மேல் உள்ளவர்கள் பங்கேற்கலாம். இதற்காக வயது, மருத்துவ சான்றிதழ், ஆதார் அட்டை, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஒரிஜினல் இரண்டு செட் நகல் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 97916 34373 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.