உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாலத்துடன் இணைக்கப்படாத அணுகுசாலையால் தவிப்பு

பாலத்துடன் இணைக்கப்படாத அணுகுசாலையால் தவிப்பு

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு தாலுகா புதுப்பட்டியில் இருந்து கான்சாபுரம் செல்லும் ரோட்டில் புதிதாக போடப்பட பாலத்துடன், விவசாய நிலங்களுக்கு செல்லும் அணுகுசாலை முறையாக இணைக்கப்படாததால் அப்பகுதி விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இந்த ரோட்டின் தெற்கு பகுதியில் மலையடிவாரத்தை ஒட்டி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இதில் பெரிய ஓடை என்ற இடத்தில் இருந்த தரைப்பாலத்தில், கனமழை நேரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் விவசாய நிலங்களுக்கு செல்வதில் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில் தற்போது தரைப்பாலம் மேம்பாலமாக கட்டப்பட்டுள்ளது. ஆனால், விவசாய நிலங்களுக்கு செல்லும் அணுகுசாலை முறையாக இணைக்கப்படாததால் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, பாலத்துடன் இணைக்கப்படும் அணுகுசாலையை முறையாக அமைத்து தர வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை