உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் முகப்பில் ஜொலிக்கும் அலங்கார விளக்குகள் மேம்பாட்டு பணிகள் விறுவிறு

 விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் முகப்பில் ஜொலிக்கும் அலங்கார விளக்குகள் மேம்பாட்டு பணிகள் விறுவிறு

விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ்வசதி மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் புதிதாக வாயிலின் வழியில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார விளக்குகள் ஜொலித்து அவ்வழியே செல்வோரின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.இந்தியாவில் ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் 508 ரயில்வே ஸ்டேஷன்களை அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தும் பணி ஆக 6 ல் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார். இதில் ரூ.515 கோடிக்கு தமிழகத்தில் 18 ஸ்டேஷன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்றாக விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனுக்கும் ரூ.25 கோடி ஒதுக்கி பணிகள் நடந்து வருகின்றன.இதில் முதல் கட்டத்தில் ரூ.7.73 கோடிக்கும், 2ம் கட்டத்தில் 18 கோடிக்கும் பணிகள் நடக்கின்றன. இதில்நுழைவு வாயில், சர்வீஸ் ரோடுகள், சுற்றுச்சுவர் , வேலிச்சுவர்கள் புனரமைப்பு, ஸ்டேஷன் வளாகத்தை அழகுப்படுத்துதல், உட்புற மறுசீரமைப்பு, பயணிகள் தொடர்பு கொள்ளும் வசதி, மேம்படுத்தப்பட்ட குடிநீர் வசதி, அறிவிப்பு பலகைகள், கழிவுநீர் வடிகால் வசதி பணிகள் நடந்து வருகின்றன. முதற்கட்ட பணிகள் விறுவிறுவென நடந்து வருகின்றன.வாகன நிறுத்தங்கள் நவீனமாக 'வி' வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. ரயில்வே ஸ்டேஷனின் நுழைவுப்பகுதி நீண்ட ஆண்டுகளாக இருள் சூழ்ந்து கிடந்தது. இந்நிலையில் மேம்பாட்டு பணியில் தற்போது அமைக்கப்பட்டுள்ள அலங்கார விளக்குகளால் இருபுறமும் அதிக வெளிச்சம் ஏற்பட்டுள்ளது. இவ்வழியை தினசரி நிறைய மக்கள் பயன்படுத்தி வரும் சூழலில் இந்த வெளிச்சம் மனம் நிறைவு தரும் வகையில் உள்ளதாக கூறுகின்றனர். ஸ்டேஷன் முழுவீச்சில் மறுபுனரமைப்பு செய்யப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தால் இன்னும் கண்கவர் ஒன்றாக இருக்கும் என ரயில் பயண விரும்பிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை