உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆறு மாதமாக சரி செய்யாத குழாய் உடைப்பால் சிரமம்

ஆறு மாதமாக சரி செய்யாத குழாய் உடைப்பால் சிரமம்

தளவாய்புரம், : தளவாய்புரம் அருகே குழாய் உடைந்து ஆறு மாதங்கள் கடந்தும் குடிநீர் வீணாக கண்மாயில் கலந்து வருகிறது. உடைப்பினால் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதை சரி செய்ய எதிர்பார்த்துள்ளனர்.தளவாய்புரம் மெயின் ரோட்டில் கண்மாய் நுழைவு பகுதியில் ரோட்டின் நடுவே அமைந்துள்ள குடிநீர் குழாய் உடைப்பு எடுத்து ஆறு மாதங்களுக்கு மேல் தண்ணீர் வீணாகி அருகே உள்ள கண்மாயில் வழிந்து வருகிறது.குழாய் திறப்பின் போது அதிக அளவு தண்ணீர் வெளியேறுவதும் மற்ற நேரங்களில் தொடர் கசிவும் இருந்து வருவதால் இப்பகுதி சாலை உடைப்பெடுத்து பள்ளமாக மாறி விட்டது.மெயின் ரோட்டில் உடைப்பு இருந்தும் இதை கடக்கும் அரசியல்வாதிகள் அதிகாரிகள் கண்டுகொள்ளாத சூழலால் இதே நிலை தொடர்கிறது. ஒதுங்க வழியின்றி பள்ளத்தில் வாகனங்கள் ஏறி இறங்குவதால் தடுமாறி செல்கின்றன. குழாய் உடைப்பை சரி செய்து சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ