உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போதை மாத்திரைகள் வைத்திருந்த இருவர் கைது

போதை மாத்திரைகள் வைத்திருந்த இருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 47 போதை மாத்திரைகளை வைத்திருந்த கூலித் தொழிலாளர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணன்கோவில் எஸ்.ஐ. வேல்முருகன் நேற்று முன்தினம் மதியம் 12:30 மணிக்கு சுந்தரபாண்டியம் விலக்கு பஸ் ஸ்டாப்பில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த சுந்தரபாண்டியத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் சுந்தர்செல்வம், 24, சிவக்குமார், 20, ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தபோது, அவர்களிடம் 47 போதை மாத்திரைகள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவையைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் மூலம், டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருத்துவ சீட்டினை வைத்து போதை மாத்திரைகளை வாங்கியது தெரிய வந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை