உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  445 கிராம் கவரிங் நகை அடகு தி.முக., நிர்வாகி, தலைமை ஆசிரியர் கைது

 445 கிராம் கவரிங் நகை அடகு தி.முக., நிர்வாகி, தலைமை ஆசிரியர் கைது

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 445 கிராம் கவரிங் நகைகளை அடகு வைக்க முயற்சி செய்த மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க,. மருத்துவர் அணி துணை அமைப்பாளர், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 5 பேரை ராஜபாளையம் தெற்கு போலீசார் கைது செய்துள்ளனர். ராஜபாளையம் தென்காசி ரோட்டில் முத்துாட் பின் கார்ப் கிளை செயல்படுகிறது. இதன் மேலாளர் பாப்பாத்தி. இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சத்திரப்பட்டி அருகே தேவராயன்பட்டி அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் குமரேசன் 58, இவர் ராஜபாளையத்தில் பிளக்ஸ் பிரின்டிங் போன்ற தொழில்கள் செய்து வருகிறார். இவரது பரிந்துரையின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க., மருத்துவர் அணி துணை அமைப்பாளரான சேந்தகுடியை சேர்ந்த ஆயுர் வேத டாக்டர் சதீஷ் சத்யா 48, ராஜபாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் 43, அருப்புக்கோட்டையை சேர்ந்த சோணைமுத்து 42 ஆகியோர் தங்கச் செயின், வளையல்கள் என 445 கிராம் எடை உள்ள நகைகளை அடகு வைத்து ரூ.40 லட்சம் கடன் கேட்டுள்ளனர். அதிக தொகை என்பதால் ஸ்ரீவில்லிபுத்துார் மேலாளரின் உதவியை பாப்பாத்தி கேட்டுள்ளார். அவர் வந்து நகைகளை சோதனை செய்ததில் அவை கவரிங் தெரிந்தது. இதையடுத்து தெற்கு போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. அடகு வைக்க வந்தவர்களில் மூவர், குமரேசன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து, தஞ்சாவூர் கீழவயலை சேர்ந்த ரமேஷ் 50, என்பவரை தேடி வருகின்றனர். இந்த நகையை ஏற்கனவே ராஜபாளையம் கட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் அடகு வைத்து பணம் பெற்றிருந்தனர். போலி நகைகை அடகு வாங்கி முறைகேடுக்கு உடந்தையாக இருந்ததாக அந்த சங்கத்தின் செயலாளர் சண்முகநாதனையும் 55, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி