மேலும் செய்திகள்
55 ஆசிரியர்களுக்கு ஜாலி போனிக்ஸ் பயிற்சி
10 hour(s) ago
கலசலிங்கம் பல்கலை சாதனை
10 hour(s) ago
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிக்கும் 7 புதிய நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் ஒதுக்கப்பட்டு விரைவில் வழங்கப்படவுள்ளது.விருதுநகர் மாவட்டம் முழுவதும் செல்ல ஒரு நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் மட்டுமே உள்ளது. இந்த வாகனம் சுழற்சி முறையில் மாவட்டம் முழுவதும் நடைபெறும் கால்நடை மருத்துவ முகாம்களுக்கு செல்கிறது. இந்த வாகனத்தில் தலா ஒரு மருத்துவர், உதவியாளர், டிரைவர் சென்று முகாம் நடக்கும் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை மருத்துவர், உதவியாளருடன் இணைந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.மாவட்டம் முழுவதும் செல்வற்கு ஒரு வாகனம் மட்டுமே இருப்பதால் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பகுதிகளுக்கு செல்வதில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு கால்நடை சிகிச்சை அளிப்பதற்காக புதியதாக 245 நடமாடும் கால்நடை மருத்துவமனை வாகனங்களை 234 தொகுதிக்கும் வழங்கவுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, விருதுநகர், ராஜபாளையம், சாத்துார், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்துார், திருச்சுழி உள்ளிட்ட 7 சட்டசபை தொகுதிகளுக்கும் தொகுதிக்கு ஒன்று என புதிய நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் வழங்கப்பட உள்ளது.இதனால் அனைத்து பகுதிகளுக்கும் சுழற்சி முறையில் சென்று கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை வழங்க முடியும்.
10 hour(s) ago
10 hour(s) ago