| ADDED : டிச 01, 2025 06:33 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் தொடர்ந்து மழை பெய்த நிலையில் அதிகபட்சமாக சிவகாசியில் 84 மி.மீ., மழையளவு பதிவானது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இல்லாமல் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையும், பனி மூட்டமும் நிலவுகிறது. நேற்று முன்தினம் டிட்வா புயல் காரணமாக காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் நகர், புறநகர், ஊரகப்பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து, மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி திருச்சுழியில் 17.60 மி.மீ., ராஜபாளையம் 19, காரியாபட்டி 13, ஸ்ரீவில்லிப்புத்துார் 31.40, விருதுநகர் 18.30, சாத்துார் 20, பிளவக்கல் 25.60, வத்திராயிருப்பு 24, கோவிலான்குளம் 17.60, வெம்பக்கோட்டை 13.40, அருப்புக்கோட்டை 17 மி.மீ., மழையளவு பதிவானது. அதிகபட்சமாக சிவகாசியில் 84 மி.மீ., மழை பெய்தது.