உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கெடுபிடியை மீறி கொண்டாட்டம்-- 3 இடங்களில் நேரடி ஒளிபரப்பு

கெடுபிடியை மீறி கொண்டாட்டம்-- 3 இடங்களில் நேரடி ஒளிபரப்பு

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் போலீசாரின் கெடுபிடியையும் மீறி பக்தர்களுக்கு பிராண பிரதிஷ்டை நேரடி ஒளிபரப்பு, கோயில்களில் அன்னதானம், பட்டாசு வெடித்தல் வண்ண விளக்குகள், இரவு வீடுகளில் தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியுடன் பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.அயோத்தியில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை அடுத்து கடந்த 10 நாட்களுக்கும் மேல் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த ஆன்மீக இயக்கங்கள் ஹிந்து அமைப்புகள் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது. கோயில்களில் பொதுமக்கள் நேரடியாக கண்டு மகிழும்படி எல்.இ.டி திரை மூலம் நேரடி ஒளிபரப்பும் செய்ய இருந்த சூழலில் போலீசாரின் வாய்மொழி உத்தரவு, அதிக கெடுபிடி காரணமாக பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளுக்கு தடை ஏற்பட்டது.இவற்றையும் மீறி நேற்று காலை முதல் ராஜபாளையம் கோட்டை தலைவாசல் தெரு வேங்கேசனம் சாவடி பகுதியில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தெரு முழுவதும் காவி கொடிகளும், குழந்தை ராமர் படங்களுக்கு அலங்கரித்து ராம நாம பஜனை நடந்தது.* பழைய பாளையம் பெரிய சாவடி வளாகத்தில் நிகழ்ச்சிக்கு பின் பட்டாசு வெடித்து பிரசாதம் இனிப்பு வழங்கப்பட்டது.* அஷ்ட வரத ஆஞ்சநேயர் கோயிலில் புனித நீர் தெளித்து அன்னதானம் வழங்கப்பட்டது.* ராஜபாளையம் ராமசாமி கோயிலில் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் ராம நாம ஜெபத்துடன் தெருக்களில் சுற்றி வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ