உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ஆதிதிராவிடர் நலத்துறை பொதுக்குழு கூட்டம்

 ஆதிதிராவிடர் நலத்துறை பொதுக்குழு கூட்டம்

விருதுநகர்: விருதுநகர் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலம், பழங்குடியினர் நலத்துறை அடிப்படை ஊழியர் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம், மாநில பொதுச்செயலாளர் பாண்டியராஜா தலைமையில் நடந்தது. ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல மாணவர்கள் விடுதிகளை மூடுவதை கைவிட வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறையில் கருணை அடிப்படையிலான பணியிடங்களை உரியவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர் தங்கம், செயலாளர்கள் சுரேஷ் பாண்டி, மகேந்திரன், பொருளாளர் ராமச்சந்திரன், இணைச் செயலாளர் ராமன், மகளிர் அணி தலைவர் பேச்சியம்மள், அரசு ஊழியர் சங்கம் மாநில முன்னாள் செயலாளர் கண்ணன், மாவட்ட செயலாளர் வைரவன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை