விவசாயக் கழிவுகளை மக்க வைத்து இயற்கை உரமாக மாற்ற அறிவுரை
விருதுநகர்; தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாகவிருதுநகர் மாவட்டத்தில் அறுவடைக்கு பின் வரும் விவசாய கழிவுகளை மக்க வைத்து இயற்கை உரம், சத்துாட்டி உரமாக மாற்றலாம் என வேளாண் இணை இயக்குனர் விஜயா அறிவுரை வழங்கி உள்ளார்.தற்போது அறுவடை நடப்பதால் அதன் விவசாய கழிவுகள் எரிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதை உரமாக்க வலியுறுத்தி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக வேளாண் இணை இயக்குனர் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில், தற்போது நெல், மக்காசோளம், சிறுதானியங்கள் உள்ளிட்டவை அறுவடை செய்யப்பட்டு வருகிறது.விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் அறுவடை செய்யப்பட்ட பயிர் கழிவுகளை ஒரு சேர சேகரித்து அவற்றை பண்ணைகளில் ஏதாவது ஒரு பகுதியில் அதுவும் நீர் ஆதாரம், சாலை போக்குவரத்து உள்ள மேடான இடத்தில் சேகரித்த பண்ணை கழிவுகளை குவியலாக வைக்க வேண்டும். கழிவுகளை சிறுசிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பெரிய பெரிய துண்டுகளாக கழிவுகள் இருந்தால் எளிதாக மக்கிட முடியாது.விகிதம் குறைவாக இருந்தால் தான் எளிதாக மக்கும். மக்குவித்தலின் போது அதிகம் கரிமசத்து, தழைசத்து உள்ள பண்ணை கழிவுகளை மாற்றி அடுக்கி போடும் போது விரைவாக மக்கும்ஒரு டன் பண்ணை கழிவுகளுக்கு 2 கிலோ வேஸ்ட்-டி-கம்போஸ்டரை 20லிட்டர் நீரில் கலந்து கரைசலாக்கிக் கொள்ள வேண்டும். இதனை குப்பை குவியல் மீது தெளிக்க வேண்டும். கம்போஸ்ட் படுக்கையில் காற்றோட்ட வசதி ஏற்படுத்தவேண்டும். இது குறைந்த செலவிலே தயாரிக்கப்படுவதால் சாகுபடிக்கான உரச்செலவு கணிசமாக குறையும். எனவே தற்போது அறுவடை காலம் என்பதால் பயிர் கழிவுகள், பண்ணை கழிவுகளை தீயிட்டு எரிக்கமால் எளிதாக மக்கிட வைத்து நிலத்தில் இடுவதால் சாகுபடியில் மகசூல் அதிகரிக்கும், என்றார்.