உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிறிய கைத்தறி பூங்கா அமைக்க  அழைப்பு

சிறிய கைத்தறி பூங்கா அமைக்க  அழைப்பு

விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன் சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி 100 கைத்தறிகள் அமைத்து, அதற்கு தேவையான தொழிற்கூடம், கோடவுன் வசதி அமைத்து மின், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட கட்டுமான வசதிகளை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி கொள்ள ஏதுவாக பொது வசதி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள், நெசவாளர்கள் அடங்கிய சிறப்பு நோக்கு முகமை அமைத்து மார்ச் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கைத்தறி அலுவலகத்தை அணுகலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ