| ADDED : ஜன 01, 2024 04:58 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் ஜீயர்கள் பங்கேற்ற திருப்பாவை முற்றோதல் மாநாடு, திரளான பக்தர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது.இதனை முன்னிட்டு நேற்று காலை 9:30 மணிக்கு ஆண்டாள் ஆடிப்பூர பந்தலில் திருப்பாவை முற்றோதல் மாநாடு துவங்கியது. விஷ்வ ஹிந்து பரிஷத் தென் பாரத துறவிகள் பேரவை ஒருங்கிணைப்பாளர் சரவணகார்த்திக் தலைமை வகித்தார். பா.ஜ., மாவட்ட தலைவர் சரவண துரைராஜா முன்னிலை வகித்தார். புலவர் அனிதா வரவேற்றார்.கோவில்பட்டி ராவில்லா பள்ளி மாணவிகளின் திருப்பாவை பாடல்கள் நாட்டியம் நடந்தது. சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், ஆழ்வார் திருநகரி ரெங்க இராமானுஜ ஜீயர் சுவாமிகள், தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன், விஷ்வ ஹிந்து பரிஷத் தேசிய இணை செயலாளர் நாகராஜன், ஒரே நாடு ஆசிரியர் ராமநம்பி நாராயணன், வேதபிரான் சுதர்சன், ஸ்தானிகம் ரமேஷ் பங்கேற்று பேசினர்.அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ்களை ஜீயர் சுவாமிகள் வழங்கினர்.திருப்பாவை முற்றோதல் ஊர்வலத்தினை தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன், தொலைக்காட்சி நெறியாளர் ரங்கராஜ் பாண்டே கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பாவை பாடல்கள் பாடி நான்கு ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். ஆண்டாள் சன்னதியில் தாங்கள் கொண்டு வந்த சீர்களை சமர்ப்பித்து பிரார்த்தனை செய்தனர்.