மேலும் செய்திகள்
திருத்தங்கலில் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
19 hour(s) ago
வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவரை கைது செய்ய மறியல்
19 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி (டிச. 11) விருதுநகநர்
19 hour(s) ago
மானியம் ஆணை வழங்கல்
19 hour(s) ago
மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவ மழை இயல்பை விட அதிக அளவு பெய்து நீர்நிலைகள் நிறைந்து காணப்பட்டன.மொத்தமுள்ள 750க்கும் அதிகமான கண்மாய்களில் நீர்வளத்துறை, ஊராட்சி ஒன்றியங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலானவற்றில் இதே நிலை இருந்தும் மழைக்காலத்தின் போது அவற்றை முறையாக இயக்க முடியாமல் தண்ணீர் வெளியேறிய நிலை காணப்படுகின்றன.விவசாய தேவைகளின் முக்கிய ஆதாரமாக உள்ள கண்மாய், குளங்களுக்கு நீரை தேக்கி வைக்கவும், அவசியமான போது திறந்துவிடவும் ஷட்டர்கள் முறையாக இயங்குவது அவசியம். ஆனால் நீர்வள ஆதாரத்துறையினர், அதிகாரிகள் கண்மாய்களை மராமத்து பணிகளில் கரையை உயர்த்துவது ஆழப்படுத்துவது என நடைபெறும் பெரும்பாலான பணியில் ஷட்டர்களை முறையாக செயல்பாட்டின் கீழ் கொண்டு வருவது என்பது இல்லை. ராஜபாளையம் கருங்குளம், அயன் கொல்லங் கொண்டான் பெரிய கண்மாய், வெங்காநல்லுார் கண்மாய், முகவூர் கண்மாய், சமசிகாபுரம் கீழ இழுப்பிலாங்குளம் உள்ளிட்ட கண்மாய்களில் இது போன்ற நிலை காணப்பட்டது.கனமழையின் போது அவசரத்திற்கு கண்மாயை பாதுகாக்க வேண்டி திறந்து விடும் போது ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பாலான ஷட்டர்கள் மூடவும், திறக்கவும் முடியாத நிலை ஏற்படுகிறது. தொடர்ந்து கிரீஸ், ஆயில் போடுவதுடன் தேவையான சமயத்தில்புதிதாக மாற்றுவது இல்லை. இதனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் சில கண்மாய்களை உடைத்து தண்ணீரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் வரத்து கால்வாய்களில் வளர்ந்துஉள்ள புதர்களையும் சீமை கருவேல மரங்களையும் அகற்றி தொடர் பராமரிப்புசெய்யாததால் மண் மேவி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு புகுந்து விடுகிறது.கோடை காலத்தின்போது விவசாயத்திற்கு தேக்கி வைக்க வேண்டிய கண்மாய் நீர் ஷட்டர்களில் உள்ள கசிவுகளால் பெருமளவு வெளியேறி விடுகின்றன. கிணறு வசதியின்றி கண்மாய் நீர் இருப்பையே நம்பி உள்ள நெல் சாகுபடியில் ஈடுபடும் கண்மாய் ஒட்டிய விவசாயிகளுக்கு இதனால் தொடர்ச்சிக்கல் ஏற்படுகிறது.வரும் காலங்களில் மழைக்கு முன்பாக இதற்கென தனித்துவம் வாய்ந்த பொறியாளர்கள் துணையுடன் வரத்து கால்களை சீரமைத்து நவீன முறையில் ஷட்டர் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க வேண்டும்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago