உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ராஜபாளையத்தில் பாலப் பணிகள் தாமதம்

ராஜபாளையத்தில் பாலப் பணிகள் தாமதம்

ராஜபாளையம்: ராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றாக இருந்த டி.பி மில்ஸ் ரோட்டில் தரைப்பால பணிகள் பள்ளி நேரத்தில் தொடங்கி இதுவரை முடிக்காமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் மாணவர்கள் பாதிக்கின்றனர்.ராஜபாளையம் நாகர்பகுதி நடுவே செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றாக டி.பி மிஸ் ரோடு இருந்து வந்தது. இதன் மூலம் நகரின் நடுவே செல்லும் வாகனங்களை காந்தி கலை மன்றம் வரை கடந்து செல்ல மாற்றாக இருந்து வந்தது.இந்நிலையில் மாற்றுப்பாதையின் இரண்டு இடங்களில் வலுவிழந்திருந்த தரைபாலப் பணிகளை பள்ளி விடுமுறை அறிவித்த நேரத்தில் தொடங்காமல் ஒரு மாதம் கடந்து ஆரம்பித்து தற்போது நான்கு மாதங்களாக முடிக்காமல் வைத்துள்ளனர்.இதனால் போக்குவரத்தில் மிகுந்த தேசிய நெடுஞ்சாலையில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. எதிரெதிரே வரும் வாகனங்களை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்ககு உள்ளாகி வருகின்றனர்.மாற்று ஏற்பாடாக ஏற்கனவே இருந்த டி.பி மில்ஸ் ரோட்டில் தொடங்கப்பட்ட தரைப்பால பணிகளை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வருவதுடன் பணிகள் முடியும் வரை வாகன ஓட்டிகள் கடந்து செல்லும் சந்து பகுதிகளில் ஏற்பட்டுள்ள சிறு தடைகளை அகற்றி போக்குவரத்து சீர் செய்ய வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை