| ADDED : டிச 10, 2025 09:19 AM
சாத்துார்: சாத்துாரை சேர்ந்த கவி விஷ்ணு, 23.விடம் சிங்கப்பூர் கப்பல் கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக ரூ 4 .50 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். சாத்துார் தெற்குபட்டி சேர்ந்தவர் ஜெயவீரன் மகன் கவி விஷ்ணு. இவர் திருநெல்வேலியில் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் 2020 - 2023ல் டிப்ளமோ இன் மெரைன் இன்ஜினியரிங் படித்துள்ளார். அப்போது அவருக்கு பாடம் நடத்திய திருப்பூர் ஆசிரியர் டென்சிங் டேனியல், 45. கவி விஷ்ணுவிடம், தான் பலருக்கு வெளிநாட்டில் கப்பல் கம்பெனியில் வேலை வாங்கித் தந்துள்ளதாக கூறி சிலரின் படங்களை அலைபேசியில் காட்டியுள்ளார். இதை நம்பிய அவர் ஆசிரியர் டென்சிங் டேனியல், அவர் மனைவி ஸ்வீட் லையன் ஷர்மிளா, 32. மும்பையை சேர்ந்த கிருஷ்ண ஷெட்டி, 40.ஆகியோரிடம் ரூ 4.50 லட்சம் பணம் கொடுத்ததார். ஆனால் அவர்கள் கூறியபடி சிங்கப்பூர் கப்பல் கம்பெனியில் வேலை வாங்கித் தரவில்லை. சாத்துார் ஜே. எம். 2 நீதிமன்ற உத்தரவு படி மூன்று பேர் மீதும் மோசடி வழக்கு பதிவு சாத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.