உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  வாலிபரை தாக்கிய போலீசார் மீது வழக்கு

 வாலிபரை தாக்கிய போலீசார் மீது வழக்கு

நரிக்குடி: விருதுநகர் மாவட்டம், நரிக்குடியைச் சேர்ந்த தவக்கண்ணன், புதிய பாஸ்போர்ட் விசாரணைக்காக, 2020 மார்ச் 21ல் அ.முக்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அன்று இரவு, ஸ்டேஷனில் இருந்த ' வாக்கி டாக்கி' காணாமல் போனது தெரிந்தது. அதை, தவக்கண்ணன் தான் திருடியதாக, அவரை தாக்கிய போலீசார், வழக்கும் பதிந்தனர். கடந்த 2024ல் திருச்சுழி நீதிமன்றம் விசாரித்து, அவரை விடுதலை செய்தது . அவரை தாக்கி, பொய் வழக்கு பதிவு செய்த எஸ்.ஐ., மணிகண்டன், ஏட்டு செல்வராஜ் மீது, நீதிபதி சுந்தர் மோகன் உத்தரவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை