மேலும் செய்திகள்
அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம்
10-Oct-2025
சிவகாசி: சிவகாசி மெப்கோ ஷ்லெங்க் பொறியியல் கல்லுாரி உள்ளக புகார்கள் குழு, நர்மதா மருத்துவமனை, இன்னர் வீல் கிளப் சிவகாசி கோல்ட் சார்பில் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் அறிவழகன் தலைமை வகித்தார். உள்ளக புகார் குழு தலைவர் கோல்டா ஜெயசீலி, கல்லுாரி மருத்துவ அதிகாரி சரோஜா ஒருங்கிணைத்தனர். 700 மாணவிகளுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டது. நர்மதா மருத்துவமனை மகப்பேறு டாக்டர் நர்மதா, இன்னர் வீல் கிளப் சிவகாசி கோல்ட் தலைவர் மல்லிகா, செயலாளர் பூர்ணமலர், சீரம் நிறுவனம் கிஷோர் லால், பாலாஜி பங்கேற்றனர்.
10-Oct-2025