உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடியரசு தின நிகழ்ச்சியைபுறக்கணித்த கவுன்சிலர்கள்

குடியரசு தின நிகழ்ச்சியைபுறக்கணித்த கவுன்சிலர்கள்

விருதுநகர், : விருதுநகர் மாவட்ட ஊராட்சியின் கொடியேற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்கவில்லை.அ.தி.மு.க., வை சேர்ந்த விருதுநகர் மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்திக்கும், அ.தி.மு.க., தி.மு.க., கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு உள்ள நிலையில், நேற்று குடியரசு தின நிகழ்ச்சி நடந்தது.இந்நிலையில் அ.தி.மு.க., கவுன்சிலர் இந்திராவை தவிர வேறு கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அதிகாரிகளோடு தான் மாவட்ட ஊராட்சி தலைவர் கொடியேற்றினார். தலைவரோடு ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக தான் பலரும் வராமல் இருந்துள்ளனர்.தி.மு.க., அ.தி.மு.க.,வின் இரு தரப்பு கவுன்சிலர்களும் இணைந்து கையெழுத்திட்ட தீர்மானத்தை நிறுத்தியதை கண்டித்து 17 கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை என பங்கேற்காத தி.மு.க., கவுன்சிலர்கள் கூறுகின்றனர். அ.தி.மு.க.,வை சேர்ந்த சிலரோ பங்கேற்க விரும்பவில்லை என்றும், சிலர் வெளியூர் சென்று விட்டதாகவும் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்