உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாறுகால் பணிக்காக தோண்டிய மண்ணை அகற்றாததால் போக்குவரத்திற்கு பாதிப்பு

வாறுகால் பணிக்காக தோண்டிய மண்ணை அகற்றாததால் போக்குவரத்திற்கு பாதிப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் பூபால்பட்டி தெருவில் வாறுகால் பணிக்காக குறுகிய ரோட்டில் தோண்டி போட்ட மண்ணை அகற்றாமல் வைத்துள்ளதால் அவசரத்திற்கு போக்குவரத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.ராஜபாளையம் - தென்காசி தேசிய நெடுஞ்சாலை அருகே அம்பலப்புள்ளி பஜார் நடுத்தெரு அமைந்துள்ளது. இப்பகுதி பிரதான ரோட்டில் மட்டும் ரோடு பணிகள் முடிந்து சந்து பகுதிகளில் மேம்பாட்டு பணிகளுக்காக ரோடு முடிவடையாத நிலையில் ஒரு ஆண்டுகளுக்கு மேல் இருந்து வருகிறது.இப்பகுதி வாறுகால் தரைப்பாலம் இணைப்பு பணிகள் நீண்ட கோரிக்கைக்கு பின் கடந்த மாதம் தொடங்கிய நிலையில் தற்போது வரை இதற்காக தோண்டப்பட்ட மண் அகற்றப்படாமல் குறுகலான ரோட்டில் பாதையை அடைத்து வருகிறது. இதனால் அவசரத்திற்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் சென்று வர முடியாமல் மக்கள் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.இது குறித்து கணபதி: நீண்ட தாமதத்திற்கு பின் பணிகள் தொடங்கியும் தோண்டப்பட்ட மண்ணை ரோட்டிலேயே போட்டு வைத்துள்ளனர். இதனால் இணைப்பு ரோடு ஒத்தையடி பாதையாக மாறிவிட்டது. இதை ஒட்டி குடியிருப்புகள் அதிகம் உள்ள நிலையில் அவசரத்திற்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் சென்று வர தடை ஏற்படுவதுடன் குழந்தைகள், முதியோர் இரவு நேரங்களில் தொழிலாளர்கள் பாதிக்கின்றனர். தடைகளை சரி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை