உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தற்காலிக பஸ் ஸ்டாப்பில் தேவை கால அட்டவணை

தற்காலிக பஸ் ஸ்டாப்பில் தேவை கால அட்டவணை

ராஜபாளையம்: ராஜபாளையம் தற்காலிக பஸ் ஸ்டாண்டில் பஸ் கால அட்டவணை இல்லாததால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.ராஜபாளையம் நகர் பகுதி நடுவே செயல்பட்டு வந்த பழைய பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிக்காக முற்றிலும் இடித்து கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.அதுவரை பயணிகள் பயன்பாட்டுக்கு என தேசிய நெடுஞ்சாலை அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு ஒரு பகுதி நிழல் குடையுடன் கூடிய தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது.ஆனால் பணிகள் தொடங்கி ஒரு வருடம் கடந்தும் அடிப்படை வசதியான பஸ்கள் வந்து செல்லும் நேரத்திற்கான கால அட்டவணை வைக்கப்படவில்லை.தினந்தோறும் குறைந்தது 200 க்கும் மேற்பட்ட பஸ்களும், குறைந்தது 3000 பயணியரும் வந்து செல்லும் பஸ் ஸ்டாப்பில் கால அட்டவணை இல்லாததால் காத்திருக்கும் வெளியூர் பயணிகள் பஸ் நேரத்தை கடைகளில் உள்ளவர்களிடம் அன்றாடம் கேட்டு முகம் சுளிக்கும் அவல நிலை உள்ளது.இது தவிர மாணவிகள் தற்காலிக கழிப்பறைகள் வசதி இல்லாததால் அருகில் உள்ள உணவகங்களை நாடும் நிலை ஏற்பட்டு வருகிறது. பணிகள் முடியும் வரை குடிநீர், நேரத்திற்கான கால அட்டவணை, தற்காலிக கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை