உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி., யில் தெப்பத்திருவிழா நடத்த பக்தர்கள் எதிர்பார்ப்பு

ஸ்ரீவி., யில் தெப்பத்திருவிழா நடத்த பக்தர்கள் எதிர்பார்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: வடகிழக்கு பருவமழையால் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் திருமுக்குளம் முழு அளவில் நிரம்பியுள்ளதால் தற்போது மாசி மகத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடத்த வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.இக்கோயிலில் மாசி மகத்தை ஒட்டி தெப்பத் திருவிழா நடப்பது வழக்கம். ஆனால் போதிய மழை இல்லாமல் திருமுக்குளத்தில் போதிய தண்ணீர் நிரம்பாததால் பல ஆண்டுகளாக தெப்பத் திருவிழா நடைபெறவில்லை. குளத்தின் சுற்றுச்சுவர்களும் சேதமடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளது.இந்நிலையில் தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையினால் ஸ்ரீவில்லிபுத்தூர் கண்மாய்களும், குளங்களும் நிரம்பியுள்ளன. வழக்கத்தை விட அதிகமாக திருமுக்குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.எனவே, இந்த ஆண்டு மாசி மகத்தை முன்னிட்டு ஆண்டாள் தெப்பத் திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஹிந்து அமைப்புகளும், ஆண்டாள் பக்தர்களும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ