உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாவட்ட ஓவியப்போட்டி

மாவட்ட ஓவியப்போட்டி

விருதுநகர் : விருதுநகர் பி.எம். ஸ்ரீ கேந்திரிய வித்யாலயாவில் மாணவர்களின் தேர்வு பயம் போக்கும் வகையில் 'தேர்வு வீரர்கள்' என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன.நேதாஜி சுபாஷ் சந்திபோஸின் வீரம், தைரியத்தை கவுரவிக்கும் விதமாக 9 நாட்கள் வீரதீர உத்சவத்தை பிரதமர் மோடி டில்லி செங்கோட்டையில் நேற்று துவங்கி வைத்தார். இதை முன்னிட்டு விருதுநகர் வரலொட்டி பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயாவில் பரக்ராம் திவாஸ் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் மாணவர்களின் தேர்வு பயம் போக்கும் வகையில் பரிக்ஷா பே சார்ச்சா எனும் தேர்வு வீரர்கள் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி நடந்தது. பள்ளி முதல்வர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார்.அரசு பள்ளி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றுகள், தேர்வு வீரர்கள் பற்றிய புத்தகங்கள் வழங்கப்பட்டன. சிறப்பான 5 ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி