உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எல்லோருக்கும் நிம்மதியை தராத இந்த ஆட்சி தேவையா அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கேள்வி

எல்லோருக்கும் நிம்மதியை தராத இந்த ஆட்சி தேவையா அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கேள்வி

விருதுநகர் : எல்லோருக்கும் நிம்மதியை தராத இந்த ஆட்சி தேவையா, என விருதுநகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.போதை பொருட்கள் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தி.மு.க., அரசை கண்டித்து விருதுநகர் அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்றே்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: தமிழகத்தில் இன்று எங்கு பார்த்தாலும் போதை பொருள். ரூ.2 ஆயிரம் கோடிக்கு போதை பொருள் பிடிபட்டுள்ளது.இதில் சம்மந்தப்பட்டவர் தி.மு.க.,வின் அயலக செயலாளராக பதவி வகிக்க கூடிய ஜாபர். இவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. போதை பொருளை பயன்படுத்தி மாணவர் சமுதாயத்தை, இளைஞர்களை சீரழிக்கின்ற இந்த ஆட்சியை கண்டிக்கிறோம்.பாரபட்சமில்லாமல் போதை பொருள் சப்ளையில் உடந்தையாக இருந்தவர்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகமெங்கும் கிராமங்களிலே கஞ்சா, அபின் கிடைக்கிறது. என்னென்ன பெயரிலோ போதை பொருட்களை சொல்கின்றனர். இதற்கு காரணம் ஆட்சி நடத்த திராணியற்ற தி.மு.க., அரசு. ஆட்சி அதிகாரத்தை வைத்து போதை பொருளை கட்டுப்படுத்த வேண்டும். உழைக்கும் தி.மு.க., கட்சியினரையும் மதிப்பதில்லை. எல்லோருக்கும் நிம்மதியை தராத இந்த ஆட்சி தேவையா என்பதை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும். திறனற்ற இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற செய்ய வேண்டும். லோக்சபாவில் குரல் ஓங்கி ஒலித்தால் தான் காவிரி பிரச்னை, பாலாறு, முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். தமிழகத்தின் உரிமைகளுக்காக விட்டு கொடுக்காமல் போராடிய ஆட்சி அ.தி.மு.க., ஆட்சி தான், என்றார்.மேற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன்,. முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் , எம்.எல்.ஏ., மான்ராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி, உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை