மேலும் செய்திகள்
வயர்கள் திருட்டு
02-Jul-2025
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஆத்திப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் மின் மோட்டார் வயர் திருடு போனதால் 20 நாட்களாக குடிநீரின்றி மக்கள் அவதிப்படுவதாக செய்தி தினமலர் நாளிதழில் வெளியானதையடுத்து உடன் வயர் மாற்றப்பட்டு குடிநீர் வினியோகம் நடந்தது.ஆத்திபட்டி ஊராட்சியை சேர்ந்த பெத்தம்மாள் நகர், லட்சுமி நகருக்கு மேல்நிலைத் தொட்டி கட்டி மின் மோட்டார் மூலம் குடிநீர் ஏற்றி வினியோகம் செய்யப்படுகிறது. 20 நாட்களுக்கு முன்பு மின் மோட்டாரின் வயரை யாரோ திருடி சென்று விட்டனர். இதனால் குடிநீர் வினியோகம் தடைபட்டது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி, ஒன்றிய அலுவகத்திற்கும் தகவல் கொடுத்து அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, இது குறித்தான செய்தி தினமலர் நாளிதழில் 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. உடன் ஊராட்சி நிர்வாகத்தினர் 150 மீட்டர் தூரம் மின் வயரை பதித்து மின் மோட்டாரை சரி செய்து இயக்கி, குடிநீரை விநியோகம் செய்தனர்.
02-Jul-2025