மேலும் செய்திகள்
வத்திராயிருப்பில் லட்ச்சார்ச்சனை நிறைவு
8 hour(s) ago
ஆண்டாள் திருப்பாவை முற்றோதல் ஊர்வலம்
8 hour(s) ago
நகை திருட்டு
8 hour(s) ago
சகோதரிகள் மாயம்
8 hour(s) ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ரோடு ஓரங்களில் நிற்கும் லாரிகளில் டீசல்களை திருடி செல்வதால் டிரைவர்கள் அவதிப்படுகின்றனர். அருப்புக்கோட்டை வழியாக மதுரை -- தூத்துக்குடி நான்கு வழி சாலை செல்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் பல்வேறு விதமான பொருட்களை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி துறைமுகத்துக்கு செல்கிறது. நீண்ட தூரத்தில் இருந்தும் வரும் லாரிகள் ஆங்காங்கு நிறுத்தி டிரைவர்கள் ஓய்வு எடுப்பது வழக்கம். அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் லாரிகளை நிறுத்தி டிரைவர்கள் இளைப்பாறுவர். நேற்று முன் தினம் அதிகாலை1:30 மணிக்கு மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த 2 டேங்கர் லாரிகள் பஸ் ஸ்டாப் அருகில் நிறுத்தி விட்டு, டிரைவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். காலையில் எழுந்து லாரியை ஓட்ட முயன்ற போது ஸ்டார்ட் ஆகவில்லை. டிரைவர்கள் கீழே இறங்கி வந்து பார்த்த போது 2 லாரிகளின் டேங்க் மூடி உடைக்கப்பட்டு அதிலிருந்து டீசல் திருடு போனது தெரிய வந்தது. ஒவ்வொரு லாரியிலும் 500 லிட்டருக்கு மேல் டீசல் திருடப்பட்டு உள்ளதால் லாரி டிரைவர்கள் மீண்டும் டீசல் போட பணம் இல்லாமல் திண்டாடி போய் உள்ளனர். ஹைவே பெட்ரோல் மற்றும் இரவு நேர ரோந்து செல்லும் போலீஸார்கள் நான்கு வழி ரோடுகளில் அடிக்கடி சோதனை செய்து டீசல் திருடர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago