உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மருந்து கடை உரிமையாளருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்

மருந்து கடை உரிமையாளருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்

ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் முனிசிபல் ரோட்டில் மருந்து கடை நடத்தி வருபவர் ரமேஷ் குமார். இவரது கடையில் 2018 ஜன. 9ல் விருதுநகர் மருந்து ஆய்வாளர் ஆய்வு செய்தார். அப்போது மருந்து சீட்டு பதிவேடு முறையாக பராமரிக்காமல் மருந்துகள் விற்பதை கண்டறிந்தார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மருந்து ஆய்வாளர் வழக்கு தாக்கல் செய்தார். இதில் மருந்து கடை உரிமையாளர் ரமேஷ் குமாருக்கு, நீதிமன்றம் கலையும் வரை ஒருநாள் சிறை தண்டனையும், ரூ. 60 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பிரித்தா உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி