உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  சல்வார்பட்டி தரைப்பாலத்தை மேம்பாலமாக்க எதிர்பார்ப்பு

 சல்வார்பட்டி தரைப்பாலத்தை மேம்பாலமாக்க எதிர்பார்ப்பு

சாத்துார்: சாத்துார் தாயில்பட்டி ரோட்டில் சல்வார்பட்டி தரைப்பாலத்தை மேம் பாலமாக கட்டித் தர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். சாத்துாரில் இருந்து திருவேங்கடம் செல்லும் ரோட்டில் சல்வார்பட்டி கிராமம் உள்ளது. இங்கு பொறியியல் கல்லுாரி, தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ரெங்கநாயகி வரதராஜ் கல்லுாரி அருகில் சிற்றாறு நதி ஒன்று ஓடுகிறது. பருவ மழை காலத்தில் காட்டுப்பகுதியில் இருந்து பெருகி வரும் வெள்ளம் இந்த சிற்றாறு நதி மூலம் சாலையை கடந்து சென்று வைப்பாற்றில் கலக்கிறது. இந்த ரோட்டில் தற்போது தரைமட்ட ஓடை பாலம் உள்ளது. குறைந்த அளவு தண்ணீர் வரும்போது பாலத்தில் உள்ள கண்கள் வழியாக தண்ணீர் வெளியேறிவிடும். ஆனால் பலத்த மழை பெய்யும் போது பாலத்தை மூழ்கடித்த படி வெள்ளம் செல்லும். இது போன்ற சமயங்களில் சாத்துார் தாயில்பட்டி செல்லும் ரோடு துண்டிக்கப்பட்டு விடுகிறது. கடந்த காலங்களில் பலமுறை இந்த பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுப்பிரமணியபுரம், சல்வார்பட்டி, தாயில்பட்டி மக்கள் இரவார்பட்டி சென்று சாத்துார் வந்தனர். நெடுஞ்சாலைத் துறையினர் இந்த பகுதியில் மேம்பாலம் அமைத்து தருவதன் மூலம் மழைக்காலத்தில் போக்குவரத்து தடையின்றி நடைபெறும். இப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் அச்ச மின்றி சென்று வர முடியும். எனவே இங்கு மேம்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ