| ADDED : ஜன 08, 2024 05:23 AM
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பாக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு சாதி வேறுபாடுகளற்ற சமூக நல்லிணக்கம், போதைப்பொருட்களை தடுத்தல், குழந்தைத் திருமணம், சாலைப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து ஆகியவற்றின் மீது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'கற்றது ஒழுகு' என்ற தலைப்பில், சமூக வாழ்வியலுக்கான வழிகாட்டுதல் கல்வி நிகழ்ச்சி ஜன. 4 முதல் 2 மாதங்களுக்கு அனைத்து வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் நடக்கிறது.இதில் போலீஸ்துறை, கல்வித்துறை, பேரிடர் மேலாண்மை துறை, வனத்துறை, மின்துறை, மருத்துவத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்ட அரசுத்துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், அடங்கிய குழு மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்குகின்றனர். இதற்கான பயற்சி கையேடு வழங்கப்படுகிறது, என்றார்.