உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காரியாபட்டி ஆதார் மையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தல்

காரியாபட்டி ஆதார் மையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தல்

காரியாபட்டி : காரியாபட்டி தாலுகா அலுவலக ஆதார் மையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருவதால் கூடுதல் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவலியுறுத்தினர்.காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. புதிய ஆதார், பெயர், அலைபேசி எண், போட்டோ மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள மக்கள் அலைமோதி வருகின்றனர். ஆதார் மையத்திற்குள் செல்ல டோக்கன் பெற வேண்டும். அதிகாலை 4:00 மணி முதல் டோக்கன் வாங்க மக்கள் காத்திருக்கின்றனர். காலை 10:00 மணிக்கு தான் டோக்கன் வழங்கப்படுகிறது.அதில் 30 பேருக்கு மட்டுமே டோக்கன் கொடுக்கப்படுகிறது. மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மாலை 5:00 மணி வரை காத்திருந்து திருத்தங்களை செய்ய வேண்டி இருக்கிறது. ஒரு நாள் முழுக்க காத்திருப்பதால் கூடுதல் செலவுகள் ஏற்பட்டு பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஒரு சில நேரங்களில் சர்வர் முடங்கி விட்டால் அன்றைய தினம் டோக்கன் பெற்றும் வீணாகி விடுகிறது.ஒரு பணியாளர் மட்டுமே இங்கு பணியாற்றி வருகிறார். அனைத்து பணிகளையும் ஒருவரே செய்ய வேண்டி இருப்பதால் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது.பணியாளர் பற்றாக்குறையால் உரிய நேரத்திற்கு ஆதார் திருத்தம் செய்ய முடியாமல் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கூடுதல் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ