| ADDED : பிப் 06, 2024 12:07 AM
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளாச்சித் திட்டம் மாவட்டத்தில் 90 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இக்கிராமங்களில் பிப். 7, 28 ஆகிய இரு நாட்களில் வேளாண்த்துறை, பல்வேறு இதர துறைகள் ஒருங்கிணைந்து விவசாயிகள் பயனடையும் சிறப்பு முகாம் நடக்கிறது.இம்முகாமில் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தல், பி.எம்.,கிசான், பிற திட்டங்களில் பயனாளிகளை பதிவு செய்தல், வண்டல் மண் எடுக்க விவசாயகளிடமிருந்து விண்ணப்பம் பெறுதல், கால்நடைகள் நல முகாம், பயிர் கடன் வழங்க விவசாயிகளிடமிருந்து விண்ணப்பம் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் நடக்கும்.எனவே சம்மந்தப்பட்ட 90 ஊராட்சிகளை சார்ந்த விவசாயிகள் முகாம்களில் பங்கேற்கலாம், என்றார்.