உள்ளூர் செய்திகள்

சான்றிதழ் வழங்கல்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ஆதி திராவிட நலத்துறை, வருவாய் துறை சார்பில் பழங்குடியின முகாம்களில் வாழும் நபர்களுக்கு அடிப்படைச் சான்றுகளை கலெக்டர் சுகபுத்ரா வழங்கினார். ராம்நகர், ஜெயந்தி நகர், அத்தி கோயில், அய்யனார் கோயில் என 4 முகாம்களில் 200க்கும் அதிகமான மலைவாழ் குடும்பங்கள் வசிக்கின்றனர்.இவர்களில் பிறப்பு சான்றிதழ்கள் கிடைக்க பெறாமல் இருந்த 16 முதல் 70 வயது உள்ள முதியவர்கள் 61 நபர்களுக்கும், 3 பேருக்கு டிஜிட்டல் ரேஷன் கார்டு, 7 பேருக்கு ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை கலெக்டர் சுகபுத்ரா வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !