உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தோண்டி நான்கு மாதம் ஆச்சு; ரோடு போடும் பணி துவங்கல

தோண்டி நான்கு மாதம் ஆச்சு; ரோடு போடும் பணி துவங்கல

சிவகாசி: திருத்தங்கல் 52 வீட்டு காலனியில் ரோடு போடுவதற்காக தோண்டப்பட்டு நான்கு மாதங்கள் ஆகியும் பணிகள் துவங்காததால் குடியிருப்பு வாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.திருத்தங்கல் 52 வீட்டு காலனியில் உள்ள தெருக்களில் ரோடு சேதம் அடைந்திருந்தது. இதனையடுத்து தெருக்களில் ரோடு போடும் பணி 4 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. ஒரு தெருவில் ரோடு போடுவதற்காக தோண்டப்பட்ட நிலையில் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.கற்கள் பெயர்ந்த நிலையில் இருப்பதால் கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகின்றது. மேலும் டூவீலரில் வருபவர்கள் அடிக்கடி கீழே விழுகின்றனர். மழை பெய்தால் நடப்பதற்கே சிரமம் ஏற்படுகிறது.இதே போல் மற்ற தெருக்களில் ரோடு போடுவதற்காக ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்ட நிலையில் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் உடனடியாக ரோடு போடும் பணியை துவங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை