உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  காவேரி துலா ஸ்நான வழிபாடு

 காவேரி துலா ஸ்நான வழிபாடு

அருப்புக்கோட்டை: நவ. 17- -: அருப்புக்கோட்டை ஆயிரம் கண் மாரியம்மன் கோயில் தெப்ப குள கரையில் காவேரி துலா ஸ்நான வழிபாடு நடந்தது. காவேரி துலா ஸ்நானம் என்பது ஐப்பசி மாதத்தில் காவிரி ஆற்றில் புனித நீராடும் வழிபாடாகும். இது ஜென்ம பாவங்களை போக்கியும் வறுமையை நீக்கி செல்வத்தை பெருக்கும் என்பது ஐதீகம். இந்நாளில் நீர் நிலைகளில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்பதால் ஆயிரங்கண் மாரியம்மன் தெப்ப குள கரையில் காவிரி துலாஸ்தான வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். காவேரி அன்னைக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை