உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமடைந்த நிழற்குடை பயணிகள் அச்சம்

சேதமடைந்த நிழற்குடை பயணிகள் அச்சம்

சிவகாசி: சிவகாசி அருகே பூவநாதபுரம் விலக்கு பஸ் ஸ்டாப்பில் சேதம் அடைந்துள்ள நிழற்குடைகளால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.சிவகாசி அருகே பூவநாதபுரம் விலக்கு பஸ் ஸ்டாப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை கட்டப்பட்டது. இங்கு பூவநாதபுரம் வடபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் காத்திருந்து பஸ் ஏறுகின்றனர். கல்லுாரி மாணவர்களும் இந்த பஸ் ஸ்டாப்பில் காத்திருந்து பஸ் ஏறுகின்றனர்இந்நிலையில் இங்குள்ள நிழல்களையும் கூரை சேதமடைந்து விழுந்துள்ளது. இதனால் பயணிகள் மழை, வெயில் காலங்களில் காத்திருந்து பஸ் ஏற முடியவில்லை. எனவே சேதம் அடைந்த நிழற்குடையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ