உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துாரில் குழாயில் மீண்டும் உடைப்பு: வீணாகும் குடிநீர்

சாத்துாரில் குழாயில் மீண்டும் உடைப்பு: வீணாகும் குடிநீர்

சாத்துார் : சாத்துார் அருகே குடிநீர் குழாயில் வீடு உடைப்பு ஏற்ப ட்டு குடிநீர் வீணாகி வருவது தொடர் கதையாகி வருகிறது.சாத்தூர் நகராட்சிக்கு சீவலப்பேரி தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் நாள்தோறு 30 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட வேண்டும்.ஆனால் தினமும் 18 முதல் 22 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வருகிறது. இந்த குடிநீரை வைத்து நகராட்சி நிர்வாகம் 24 வார்டுகளிலும் சுழற்சி முறையில் தினமும் குடிநீர் வழங்கி வருகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு சடையம்பட்டி சாய்பாபா கோயில் கோயில் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி அப்பகுதியில் குளம்போல் தேங்கியிருந்தது. இந்த உடைப்பு இன்று வரை சரி செய்யப்படவில்லை.இந்த நிலையில் சாத்துார் - கோவில்பட்டி நான்கு வழிச்சாலை மேற்கு பக்கம் சர்வீஸ் ரோட்டில் சத்திரப்பட்டி விலக்கு அருகே மீண்டும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகவெளியேறி மழை நீர் வடிகாலில் கலந்து வருகிறது.இதன் காரணமாக நகராட்சியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியஅதிகாரிகள் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள குடிநீர்குழாய் உடைப்புகளை சரி செய்து தங்கு தடையின்றி நகராட்சிபில் குடிநீர் வினியோகம் செய்யஉரியநடவடிக்கை எடுக்கவேண்டும் எனசமூகஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்