உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

தம்பியை அடித்த அண்ணன்சிவகாசி: சிவகாசி ராணி அண்ணா காலனியைச் சேர்ந்தவர் செல்வம் 31. இவரது அண்ணன் பாண்டீஸ்வரனுக்கும் 37, அவரது மனைவிக்கும் குடும்பத்தில் பிரச்னை இருந்து வந்த நிலையில், செல்வம் அண்ணன் குடும்பத்தை கவனித்து வந்தார். இந்நிலையில் பாண்டீஸ்வரன், செல்வத்தை தகாத வார்த்தை பேசி அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.கட்டட தொழிலாளிக்கு அடிசிவகாசி: சிவகாசி நடையனேரியை சேர்ந்தவர் சரவணன் 51. கட்டட தொழிலாளியான இவர் அருகில் வசிக்கும் தவசியப்பன் மூலமாக கோபாலன்பட்டியைச் சேர்ந்த தர்மரிடம் ரூ. 5000 கடன் வாங்கியிருந்தார். அதில் ரூ. 4000 திருப்பிக் கொடுத்த நிலையில் மீதம் கொடுக்கவில்லை. இந்நிலையில் தவசியப்பன் அவரது மகன் முத்துக்கருப்பன் ஆகியோர் ஏன் மீதம் பணம் தரவில்லை என சரவணனை தகாத வார்த்தை பேசி கல்லால் அடித்தனர். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.வாலிபர் மீது போக்சோசிவகாசி: சிவகாசி பள்ளப்பட்டியை சேர்ந்த காளிராஜன், அதேப் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். அனைத்து மகளிர் போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.சொத்து பிரச்னை தகராறுசிவகாசி: சிவகாசி கீழத்திருத்தங்கல் எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்தவர் முனியாண்டி 35. இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயார் பெயரில் 8 சென்ட் இடம் வாங்கி இருந்தார். அதில் 4 சென்ட் இடத்தை இவரின் சகோதரர் சுந்தர மகாலிங்கம் தனது பெயருக்கு எழுதி வாங்கி விட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் சுந்தர மகாலிங்கம் அவரது மனைவி சபரியம்மாள், வல்லரசு ஆகியோர் முனியாண்டியை அடித்தனர். முனியாண்டி சபரியம்மாளை அடித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.கத்தி குத்துசிவகாசி: சிவகாசி அம்மன் கோவில்பட்டி தென்பாகம் தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம் 25. இவர் அதே பகுதி செல்ல காளியம்மன் கோயில் முன்பு நடந்து சென்ற போது அங்கிருந்த உதயா, ஆனந்த் , ஜெகதீஷ் ஆகியோர் தகாத வார்த்தை பேசி தர்மலிங்கத்தை கத்தியால் குத்தினர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.டூ வீலர்கள் மோதல் ஒருவர் பலிசாத்துார்: சாத்துார் ஸ்ரீரெங்காபுரத்தை சேர்ந்தவர் கனியப்பன், 54. ஜன.7ல் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) ஓ.மேட்டுப்பட்டி சென்றபோது எதிரில் டூவீலரில் வந்த ரவிராஜ், 27. (ஹெல்ட் மெட் அணியவில்லை) மோதினார். கனியப்பன் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் பலியானார் .சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.டூ வீலர் திருட்டுஸ்ரீவில்லிபுத்தூர்: கான்சாபுரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் பாலகணேஷ், 24, எலெக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் டூவீலரை நிறுத்திவிட்டு, பின்னர் மருத்துவமனைக்கு சென்று உறவினரை பார்த்து விட்டு வந்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் திருட்டுப் போயிருந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை