| ADDED : ஜன 15, 2024 11:00 PM
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட கோயில்களில் நேற்று தை முதல் நாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தன.வாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் சுவாமிக்கு பூஜை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மீனாட்சி சொக்கநாதர், பராசக்தி மாரியம்மன், வெயிலுகந்தம்மன் கோயில்கள், ராமர் கோயிலில் பூஜை, அலங்காரம் நடந்தன.மக்கள் வீடுகளில் பொங்கலிட்டனர். கிராமப்புறங்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதே போல் பலர் குலதெய்வ கோயில்களிலும் குடும்பத்துடன் சென்று பொங்கலிட்டு வழிபட்டனர்.* அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் தைப்பொங்கலை முன்னிட்டு அம்மன் யானைக்கு கரும்பு கொடுக்கும் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது.பழனியாண்டவர் கோவிலில் ஆயிரத்து 8 லட்டு அலங்காரத்தில் பழனி ஆண்டவர் அருள் பாலித்தார். வாலசுப்பிரமணிய கோயில் , பத்ர காளியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ராஜபாளையம் சுற்றுவட்டார கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் வழிபாடு நடந்தது.